நிலநடுக்கத்தால் சிதைந்து போன துருக்கி - சிரியா... மீட்பு படையை அனுப்பி வைக்கும் இந்தியா

Update: 2023-02-07 01:44 GMT

துருக்கி - சிரியா எல்லையில் 7.8 ரிக்டர் அளவுக்கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து மக்களை மீட்கும் நேரத்திற்கு எதிரான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு உதவும் வகையில் இந்தியா 2 தேசிய பேரிடர் மீட்பு குழுவை அனுப்புகிறது.

உடன் மோப்ப நாய் படையையும் மத்திய அரசு அனுப்பி வைக்கிறது.

பிரதமர் மோடி தலைமையில் உள்துறை, பாதுகாப்புத்துறை, சுகாதாரத்துறை, விமான போக்குவரத்து துறை செயலளர்கள் கலந்துக்கொண்ட உயர்மட்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்துப் பொருட்கள், நிவாரணப் பொருட்கள் உள்ளிட்ட பிற உதவிகளையும் மத்திய அரசு செய்கிறது.

நிவாரணப் பொருட்கள் அங்காரா, இஸ்தான்புல் நகரில் உள்ள இந்திய தூதரகத்துடன் ஒருங்கிணைந்து அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்