#JUSTIN || ஈரோட்டில் வங்கதேசத்தை சேர்ந்த 7 பேர் கைது - வெளியான பரபரப்பு தகவல்

x

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக மத்திய உளவுத்துறை(IB) மற்றும் கியூ பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.இதனையடுத்து இரு பிரிவினரும் இணைந்து பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது வள்ளிபுரத்தான்பாளையத்தில் தங்கி கட்டிட வேலை செய்து வந்த பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த முகமது சஹிதுல்(48),முகமது அனருல் இஸ்லாம்(26),முகமது முனிருல் இஸ்லாம்(24),முகமது மசும்(22),முகமது ருஜிபுல்(37),லால் லுட் மற்றம் முசுருல்லா ஆகிய ஏழு நபர்கள் கண்டறிந்தனர்.இவர்களின் குறித்து தீவிரமாக விசாரணை செய்த காவல்துறையினர் பெருந்துறை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.பின்னர் ஏழு நபர்களையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்...


Next Story

மேலும் செய்திகள்