11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியாகிறது
11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியாகிறது
11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பித்தவர்களில், மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பட்டியல் இன்று காலை 11.30 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எந்த மதிப்பெண் மாற்றமும் இல்லை என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியவர்களுக்கு அசல் மதிப்பெண் வழங்கப்படுத் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.