"மரக்கன்றுகளை நட்டு ஆதாரங்களை சமர்ப்பித்தால் முன்னுரிமை அடிப்படையில் பட்டா..." வட்டாட்சியர் அதிரடி
- கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், 5 மரக்கன்றுகளை நட்டு அதற்குரிய ஆதாரங்களை சமர்பித்தால், முன்னுரிமை அடிப்படையில் பட்டா வழங்கப்படும் என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
- கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் மோகன்ராஜ்.
- இவர் லஞ்சம் பெறுவது மட்டுமல்ல கொடுப்பதும் குற்றம் என, கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், நேட்டீஸ் ஒட்டி உள்ளார்.
- அதில், தமது கையொப்பம் விலை இல்லாதது ஒரு போதும் விற்பது இல்லை என்றும் லஞ்சம், கொடுப்பதும் பெறுவதும் குற்றம் என கூறப்பட்டுள்ளது.
- இது தவிர பட்டா மாறுதல் கூறும் புல எண்ணில் புதிதாக ஐந்து மரக்கன்றுகள் நட்டு அதற்குரிய ஆதாரங்களை சமர்ப்பித்தால் விண்ணப்பம் முதுநிலையில் வரிசைப்படி அல்லாமல் முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக பரிசில் இணைக்கப்படும் என்றும் நோட்டீஸ் ஒட்டி உள்ளார்.
- இது பொதுமக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.