2022 ஜனவரி 25ல் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 36,840 ரூபாயாக இருந்தது.
2022 பிப்ரவரி 14ல், உக்ரைன் போர் தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்பு, சவரன் விலை 37,560 ரூபாயாக அதிகரித்தது.
பிப்ரவரி 24ல் உக்ரைன் போர் தொடங்கிய பின், தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து, மார்ச் 7ல் 40,568 ரூபாயாக உச்ச மடைந்தது.
மார்ச் 30ல் 38,336 ரூபாயாக சரிந்து, ஏப்ரல் 18ல் 40,376 ரூபாயாக மீண்டும் அதிகரித்தது.
ஜூன் 30ல் 37,424 ரூபாயாக மீண்டும் சரிந்து, பின்னர் ஆகஸ்ட் 13ல் 39,312 ரூபாயாக அதிகரித்தது.
செப்டம்பர் 27ல் 36,880 ரூபாயாக குறைந்து, நவம்பர் 16ல் 39,760 ரூபாயாக மீண்டும் அதிகரித்தது.
டிசம்பர் 31ல் 41,040 ரூபாயாக அதிகரித்து, 2023 ஜனவரி 16ல் 42,536 ரூபாயாக புதிய உச்சத்தை எட்டியது.
ஜனவரி 26ல் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 43,040 ரூபாயாக உச்சமடைந்தது.
பிப்ரவரி 2ல், தங்கம் இறக்குமதி வரி உயர்வினால், ஆபரணத் தங்கம் விலை, சவரனுக்கு 44,040 ரூபாயாக, இதுவரை இல்லாத அளவுக்கு உச்சமடைந்துள்ளது.