சேலத்தில் திமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குழுவினர், அனைத்து தரப்பு மக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தனர்.
தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை தொடர்ந்து, ஏழாவது மாவட்டமாக சேலத்தில் திமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குழுவினர் கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதில், சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான குழுவினர், அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளையும் கேட்டறிந்து வருகின்றனர்.