இந்தியாவுக்கு எதிராக 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
vovt
லண்டன் லாட்ர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 49 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் யஷ்வேந்திர சகால் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 247 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, ரீஸ் டாப்லி பந்துவீச்சை எதிர்கொள்ள திணறியது. ரோகித் சர்மா, ஷிகர் தவாண், விராட் கோலி, ரிசப் பண்ட ஆகியோர் சொதப்பவே, 38 புள்ளி 5 ஓவர்களில் இந்திய அணி 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 100 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ரீஸ் டாப்ளே தேர்வு செய்யப்பட்டார்.