பாரிஸில் நடைபெறும் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். ஓஜாஸ் பிரவீன், பிரதமேஷ் ஜவஹர், அபிஷேக் வர்மா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய ஆடவர் அணி, இறுதிப்போட்டியில் அமெரிக்காவை 236க்கு 232 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது. இதேபோல், மகளிர் பிரிவில் அதிதி கோபிசந்த், ஜோதி சுரேகா, பர்னீத் கவுர் ஆகியோர் அடங்கிய அணி, மெக்சிகோவை 234க்கு 233 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வசப்படுத்தியது.