உலகே விழி வைத்து காத்திருக்கும் தரமான சம்பவத்திற்கு 3 தேதிகள் குறிப்பு

Update: 2024-08-09 07:53 GMT

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், 3 நேரடி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்க தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெறுகிறது. குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றனர். கமலா ஹாரிசுடன் நேருக்குநேர் விவாதத்திற்கு தயார் என டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில், வரும் செப்டம்பர் 4, 10 மற்றும் 25-ம் தேதிகளில்

அமெரிக்காவின் முன்னணி ஒளிபரப்பு நிறுவனங்களில், 3 விவாத நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தயாராக இருப்பதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதனிடையே, செப்டம்பர் 10ம் தேதி விவாத நிகழ்ச்சிக்கு கமலா ஹாரிஸ் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்