முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரஷிய தூதரகம் மூலமாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பிரதமர் உள்ளிட்ட பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்த அவர், உலக அரங்கில் இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தினார் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியா-ரஷியா இடையேயான இரு தரப்பு உறவை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்வதில் தனிப்பட்ட முறையில் மன்மோகன் சிங் பெரும்பங்காற்றினார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.