மீண்டும் ட்ரம்ப்பை கொல்ல திட்டம்? - பழைய கணக்கை முடிக்க துடிக்கும் ஈரான்.. உலகை உலுக்கிய புதிய தகவல்

Update: 2024-07-17 08:03 GMT

நவம்பரில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு முன்னதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை கொல்ல ஈரான் தீவிரமாக திட்டமிட்டு வருவதாக அமெரிக்க சிறப்பு பாதுகாப்புப் படை பரபரப்புத் தகவலைத் தெரிவித்துள்ளது...

சமீபத்தில் தாமஸ் க்ரூக்ஸ் என்ற இளைஞர் ட்ரம்ப்பை படுகொலை செய்ய முயன்ற நிலையில் நல்வாய்ப்பாக அவர் உயிர் பிழைத்தார்... இந்நிலையில் இச்சம்பவம் நிகழ்வதற்கு சில வாரங்களுக்கு முன்பாக ட்ரம்ப்பை ஈரான் கொல்ல சதித்திட்டம் தீட்டுவதாக அமெரிக்க சிறப்பு பாதுகாப்புப் படைக்கு தகவல் வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது... இருப்பினும் இவ்விரு சம்பவங்களுக்கும் தொடர்பில்லை என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். ஈரானின் ராணுவ ஜெனரல் காசிம் சுலைமானியை, 2020ல் அமெரிக்கா ட்ரோன் தாக்குதல் மூலம் படுகொலை செய்தது. இந்நிலையில், அப்போது அமெரிக்க அதிபராக இருந்தவர் ட்ரம்ப்... இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்க ஈரான் நீண்ட காலமாக திட்டமிட்டு வரும் நிலையில் வரும் வாரங்களில் ட்ரம்ப்பைக் கொல்ல முயற்சிகள் நடக்கலாம் என அமெரிக்க சிறப்பு பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது... ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை ஈரான் முற்றிலுமாக மறுத்துள்ளது... மேலும் "டிரம்ப் ஒரு குற்றவாளி, அவர் சுலைமானிமை படுகொலை செய்ய உத்தரவிட்டதற்காக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ள ஈரான் தாங்கள் சட்டப்பாதையையே தேர்ந்தெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது...

Tags:    

மேலும் செய்திகள்