போர் நடந்து வரும் உக்ரைன் சென்றுள்ள பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், உக்ரைனுக்கு இந்த நிதியாண்டிற்கான ராணுவ உதவியை 26 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது... தலைநகர் கீவ் சென்ற சுனக், அங்கு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உக்ரைனிய வீரர்களை சந்தித்து உரையாடினார். உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகள், வான் பாதுகாப்பு அமைப்புகள், பீரங்கி வெடிமருந்துகள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு அமைப்புகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என தெரிகிறது. பிரிட்டன் எப்போதும் உக்ரைனுடன் உறுதியாக துணை நிற்கும் என ரிஷி சுனக் உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.