மதரீதியாக விமர்சித்த பாகிஸ்தான் வீரர் - பிரம்படி கொடுத்த ஹர்பஜன் சிங்
இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசியபோது, நேரத்தைக் குறிப்பிட்டு மதரீதியாக கம்ரான் அக்மல் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். இதற்கு இந்திய ரசிகர்கள் தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், கம்ரான் அக்மலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், சீக்கியர்களின் வரலாற்றை அக்மல் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும், 12 மணியைக் கடந்து தாய்மார்களை சீக்கியர்கள் அந்நியர்களிடம் இருந்து காப்பாற்றி இருப்பதாகவும் கூறினார். வெட்கப்படும் வகையில் செயல்படாமல் சிறிதாவது நன்றியுடன் இருக்க வேண்டும் என்றும் ஹர்பஜன் சிங் காட்டமாக பதிவிட்டு உள்ளார்.