128 ஆண்டுகள்...பழமையான கப்பலில்...வந்தது ஒலிம்பிக் தீபம்

Update: 2024-05-09 03:22 GMT

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளையொட்டி, மார்செய்லி நகரத்திற்கு ஒலிம்பிக் தீபம் வந்தடைந்தது. கிரீஸ் நாட்டில் இருந்து புறப்பட்ட ஒலிம்பிக் தீபம், 12 நாட்கள் பயணத்திற்கு பிறகு, 128 ஆண்டுகள் பழமையான கப்பல் மூலம் பிரான்சின் துறைமுக நகரமான மார்ச்செய்லிக்கு வந்தடைந்தது. அப்போது, அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், 2012-ம் ஆண்டின் ஒலிம்பிக் நீச்சல் சாம்பியன் பிளாரென்ட், 2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பாலாலிம்பிக் தடகள வீரர் நான்டெனின் ஆகியோர் ஒலிம்பிக் தீபத்தை எடுத்து வந்தனர். பின்னர், அதை மார்செய்லி நகரத்தில் பிறந்த ராப்பர் ஜூல் என்பவரிடம் வழங்கினார். அவர், அங்கு திரண்டிருந்த ஏராளமான பொதுமக்கள் முன் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார்.

Tags:    

மேலும் செய்திகள்