ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் தொடரில் அதிர்ச்சி சம்பவம்...விளையாடும்போதே மைதானத்தில் சுருண்டு விழுந்து பலியான சோகம்

Update: 2024-07-02 13:01 GMT

சீன பேட்மிண்டன் வீரர் ஜாங் ஜிஜி விளையாடி கொண்டிருக்கும்போதே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் தொடரில், ஜப்பான் வீரர் கசுமோ கவானோவை எதிர்த்து, 17 வயதே ஆன சீன வீர ஜாங் ஜிஜி விளையாடினார். அப்போது மைதானத்திலேயே ஜாங் ஜிஜி சுருண்டு விழுந்த நிலையில், போட்டி ஏற்பாட்டாளர்கள் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் மாரடைப்பு காரணமாக ஜாங் ஜிஜி உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் சீன வீரர் சுருண்டு விழும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்