ஹசீனாவின் அடுத்த பிளான் என்ன..? ரந்தீர் ஜெய்ஸ்வால் கொடுத்த நச் பதில் | Sheikh Hasina

Update: 2024-08-09 02:05 GMT

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், வங்கதேசத்திலிருக்கும் சிறுபான்மையினர் நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக குறிப்பிட்டார். வங்கதேசத்தில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலவ வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம், வங்கதேசத்தில் விரைவில் சட்டம் ஒழுங்கு சீரடையும் என்றே எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். இந்திய தூதரகம், பணியாளர்கள் பாதுகாப்பு தொடர்பாக வங்கதேச தரப்புடன் இந்தியா தொடர்பில் உள்ளது என்றார். அப்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்திருக்கும் ஷேக் ஹசீனாவின் அரசியல் அடைக்கலம் குறித்தோ அல்லது அவரது அடுத்த கட்ட திட்டம் குறித்தோ தங்களிடம் எந்த தகவலும் இல்லை எனவும் தெரிவித்தார். ஹசீனா பிரிட்டனில் அடைக்கலம் கோரியிருந்த வேளையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் லம்மியிடம் பேசியிருக்கிறார். இருவரும் வங்கதேச சூழல் குறித்து பேசியதாக ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியிருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்