கண்ணாடிகளில் உறைந்து போன பனி.. தண்ணீரே இல்லாமல் தவிக்கும் மக்கள்.. இருளில் மூழ்கிய சாண்டியாகோ
சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் திடீரென ஏற்பட்ட பனிப்பொழிவில் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. சாலைகள், வாகனங்கள், வீடுகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இரண்டு அடிக்கு மேல் பனி படர்ந்துள்ளதால் மின்வினியோகம் மற்றும் குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளதால் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் அவதிக்குள்ளாகியுள்ளனர்.