இந்தாண்டு புதுவரவாக ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஐபோன் 15 சீரிஸ் வரவேற்பு பெற்றதுடன், பல தரப்பில் விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
செல்போன் விற்பனையில் தனி சாம்ராஜ்ஜியம் அமைத்திருக்கும் ஆப்பிள் நிறுவனம், 2012ம் ஆண்டிற்கு பிறகு சார்ஜிங் போர்ட்டுக்கு மாற்றி சி டைப் சார்ஜருக்கு மாற்றியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட போட்டி நிறுவனமான சாம்சங், குறைந்தபட்சமாக மாற்றத்தை பார்த்துள்ளோமே அது தான் வியப்பு என மறைமுகமாக ஆப்பிள் நிறுவனத்தை கேலி செய்துள்ளது.
இதுமட்டுமன்றி இணையவாசிகளும் ஐபோனில் சார்ஜர் போர்ட் மட்டுமே மாறியுள்ளதாக விதவிதமான வீடியோ எடிட்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்.