மே.வங்கத்தில் கலவரத்தை ஏற்படுத்த ரஷ்ய விமானத்தில் 4 டன் ஆயுதம்.. இந்தியாவுக்கு அதிர்ச்சி

Update: 2024-08-30 10:08 GMT

மேற்குவங்கத்தில் கடந்த 1995ம் ஆண்டு கலவரத்தை ஏற்படுத்தும் வகையில், ரஷ்ய சரக்கு விமானத்தில் சுமார் 4 டன் அளவுக்கு ஆயுதங்கள் கடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் தொடர்புடைய 7 பேரில், டென்மார்க்கை சேர்ந்த நீல்ஸ் ஹோல்க்கும் ஒருவர் என இந்தியா குற்றம்சாட்டியது. ஆயுதக்கடத்தல் வழக்கில் இந்திய நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்துவதற்காக நீல்ஸ் ஹோல்க்கை ஒப்படைக்குமாறு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்துள்ளது. இந்நிலையில், இந்தியாவின் கோரிக்கையை டென்மார்க் நீதிமன்றம் மீண்டும் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. இந்தியாவிடம் ஒப்படைத்தால், ஐரோப்பிய மனித உரிமை சட்டங்களை மீறும் வகையில், நீல்ஸ் ஹோல்க் நடத்தப்படக்கூடும் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்