எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி மரணம்..- "கடைசியாக போட்ட பரிமாற்ற ஒப்புதல்"-ரஷ்ய அதிபர் புதின் பரபரப்புத் தகவல்...
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி இறப்பதற்கு முன்பாக அவரையும் உள்ளடக்கிய கைதிகள் பரிமாற்றத்திற்கு தான் ஒப்புக் கொண்டதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் நவால்னி ஆர்க்டிக் சிறையில் உயிரிழந்தார்... இதற்கு ரஷ்ய அதிபர் புதின் தான் காரணம் என நவால்னியின் கூட்டாளிகளும் மேற்கு நாடுகள் குற்றம் சாட்டின... ஆனால் அதை அதிபர் அலுவலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது... ரஷ்ய அதிபர் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று அசத்திய விளாடிமிர் புதின் உரையாற்றுகையில் நவால்னியின் இறப்பு ஒரு துக்கமான நிகழ்வு என்று குறிப்பிட்டார்... அத்துடன் அமெரிக்காவில் இதுபோல் சிறைகளில் கைதிகள் மரணமடைந்ததில்லையா என்று கேள்வி எழுப்பிய புதின், பலமுறை அதுபோல் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், நவால்னி மீண்டும் ரஷ்யாவிற்குத் திரும்பக் கூடாது என்ற முக்கியமான நிபந்தனையுடன், அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக நவால்னியையும் உள்ளடக்கிய கைதிகள் பரிமாற்றத்திற்கு மேற்கு நாடுகளுடனான ஒப்பந்தத்திற்கு தான் ஒப்புக் கொண்டதாகவும் புதின் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.