உலகளாவிய உணவுத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய ரஷ்யா தயாராக உள்ளதாக அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை மேற்கு நாடுகள் நீக்கினால் உணவு நெருக்கடியை சமாளிக்க ரஷ்ய கூட்டமைப்பு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க தயாராக உள்ளதாக இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகியுடனான தொலைபேசி உரையாடலின் போது புதின் தெரிவித்தார்.