சம்பவம் செய்த கமலா... பின்னங்கால் பிடரியில் பட ஓட்டம் - ``NO'' மொத்தமாக எண்டு கார்டு போட்ட ட்ரம்ப்

Update: 2024-09-13 10:35 GMT

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனக்கு எதிராக அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிசுடன் இன்னொரு விவாதத்தில் கலந்து கொள்ளத் தயாராக இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்... காரணம் என்ன? பயமா?...பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...

அமெரிக்காவின் ஃபிலடெல்ஃபியா நகரில் ட்ரம்ப்புக்கும்...கமலா ஹாரிசுக்கும் இடையே தீப்பொறி பறக்க விவாதம் நடைபெற்றது ...

'சபாஷ் சரியான போட்டி'என்பதைப் போல்...ஒரு நிமிடம் கூட சலிப்பு தட்டவில்லை அந்த 90 நிமிட விவாதத்தில்...

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப்பும்...ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிசும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட முதல் விவாதம் போலத் தெரியவில்லை...

ஒரு குற்றவாளியான ட்ரம்ப்பே...குற்றவாளிகளைப் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது என கமலாவும்...அமெரிக்காவின் மிக மோசமான துணை அதிபர் கமலா ஹாரிஸ் என ட்ரம்ப்பும்.. பரம்பரை பகை போல...மாறி மாறி சரமாரி குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினர்...

கமலாவின் முக பாவனைகளும்... 'கூலாக' அவர் விவாதத்தை கையாண்ட விதமும் பலரையும் கவர்ந்தது...

அடுத்த விவாதம் எப்போது என அனைவரும் வழிமீது விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்க...இன்னொரு விவாதமா?...அதெல்லாம் சரிப்பட்டு வராதுப்பா...என நைசாக கழன்று கொண்டார் ட்ரம்ப்...

கமலாவைக் கண்டு பயந்து விட்டாரா?...இல்லை...என்னுடன் விவாதம் செய்யுமளவு கமலாவுக்கெல்லாம் திறமை பத்தாதுப்பா என நினைத்து விட்டாரா?...

அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டதும்...முதலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக இருந்த அமெரிக்க அதிபர் பைடனுக்கும், ட்ரம்ப்புக்கும் நடந்த விவாதத்தில் ட்ரம்ப் வென்றது தெளிவாக தெரிந்தது ...

அதன்பிறகு தான் பல அழுத்தங்களால் தேர்தல் பந்தயத்தில் இருந்து பின்வாங்கி விட்டு, கமலா ஹாரிசை களம் காண வைத்தார் பைடன்...

ஆனால், கடந்த 10ம் தேதி ட்ரம்ப்புக்கும் கமலாவுக்கும் நடந்த விவாதத்தில் இருவரும் திறமையாகவே வாதிட்ட நிலையில்...ட்ரம்ப்பை விட கமலா ஹாரிஸ் சிறப்பாக செயல்பட்டதாக பார்வையாளர்கள் கருதுகின்றனர் என பல செய்தி நிறுவனங்களும் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டன...

அடுத்த விவாதத்திற்கு நான் ரெடி...நீங்க ரெடியா?...என உடனடி அழைப்பு விடுத்தார் கமலா...

'ஏற்கனவே ஒரு கிட்னிய உருவுனது பத்தாதா?'என்ற வடிவேலு காமெடியைப் போல...ட்ரம்ப் கொஞ்சம் கமுக்கமாகத் தான் இருந்தார்...

Tags:    

மேலும் செய்திகள்