ரஷ்யாவுக்கு போப் பிரான்சிஸ் கடும் கண்டனம்
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ச்சியாக நடத்தி வரும் வெடிகுண்டு தாக்குதலுக்கு போப் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைனில் உள்ள ஸபோரிஷியா நகரின் மீது ரஷ்யா கடந்த திங்கள்கிழமை வான்பரப்பில் இருந்து வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதில் 19 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 7 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில், வாடிகன் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த போப் பிரான்சிஸ், ரஷ்யாவின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தார். போரை தீர்மானிக்க கூடியவர்கள் உடனடியாக அதை நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.