நெதன்யாகு போட்ட புதிய குண்டு ... "அந்த ரெண்டு விஷயம்..." - உயிர் பீதியில் காசா

Update: 2023-10-29 07:34 GMT

காசாவில் இஸ்ரேல் தரைவழித் தாக்குதலைத் துவங்கிவிட்ட நிலையில், காசா போரின் இரண்டாம் கட்டத்தை இஸ்ரேல் படைகள் நடத்தி வருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.


ஹமாஸ் ஆளுகைக்கு உட்பட்ட பாலஸ்தீன பகுதி மீது இஸ்ரேலிய விமானங்கள் பயங்கரமான தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், காசாவிற்குள் சிக்கியுள்ள மக்களுக்கும் வெளியுலகத்திற்குமான தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. டெல் அவிவில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய நெதன்யாகு, இஸ்ரேல் நீண்ட மற்றும் கடினமான ராணுவ நடவடிக்கையை எதிர்கொண்டிருப்பதாக எச்சரித்த அவர், காசா மீதான இஸ்ரேலின் தரைவழி தாக்குதலை "முழு அளவிலான படையெடுப்பு" என்றழைக்க மறுத்தார். வடக்கு காசா பகுதியை காலி செய்ய பாலஸ்தீனிய குடிமக்களை வலியுறுத்திய அவர், ஹமாஸால் பிடித்து வைக்கப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்ட பிணைக் கைதிகளை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்