உக்ரைன் சென்று திரும்பிய மோடிக்கு திடீரென வந்த போன் கால்.. முடிவுக்கு வரும் போர்..?
வங்கதேசத்தின் நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் தங்கள் கவலையை தெரிவித்தனர்.
பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார்.
அப்போது, இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ஆய்வு செய்த தலைவர்கள், இந்தியா-அமெரிக்க இடையேயான நட்புறவு, இரு நாட்டு மக்களுக்கும், ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் பயனளிக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்தனர்.
உக்ரைன் நிலைமை குறித்து இருவரும் விவாதிக்கும்போது, பிரதமர் மோடி தனது சமீபத்திய உக்ரைன் பயணம் குறித்து பைடனிடம் விளக்கினார்.
ரஷ்யா- உக்ரைன் பிரச்சனையில் விரைவாக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை திரும்ப இந்தியா முழுமையான ஆதரவை வழங்கும் என்பதை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார்.
வங்கதேசத்தின் நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் தங்கள் கவலையை தெரிவித்தனர்.
வங்கதேசத்தில் சட்டம், ஒழுங்கை மீட்டெடுக்க வேண்டும் என்றும், சிறுபான்மையினர் குறிப்பாக ஹிந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் இருவரும் வலியுறுத்தினர்.