மண் போல் சரிந்த `மலை'... மாயமான தொழிலாளர்கள்...நூலிழையில் தப்பியவர்களின் அதிர்ச்சி வீடியோ
துருக்கியில் உள்ள தங்கக் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவின் போது, அருகே இருந்த வாகனங்கள் நூலிழையில் தப்பிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அந்நாட்டின் எரிசின்கான் மாகாணத்தில் உள்ள பிரம்மாண்ட சுரங்கத்தில் மண், மலைகள் போல குவித்து வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், திடீரென அந்த சுரங்கத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவில் சிக்கி 9 சுரங்கத் தொழிலாளர்கள் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலச்சரிவு தொடர்பாக, சுரங்கத்தின் கள மேலாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, சுரங்கத்தில் மண் ஏற்றிச் சென்ற லாரிகள், நிலச்சரிவிலிருந்து நூலிழையில் தப்பிய டேஷ்கேம் காட்சிகள் வெளியாகியுள்ளன.