எரிமலைக்கு விழா கொண்டாடும் வினோத கிராம மக்கள் - படையலிட்டு மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாடு
மெக்சிகோவின் மிகப்பெரிய எரிமலையான போபோகேட்பெட்ல்-க்கு அருகே உள்ள சாண்டியாகோ சாலிசிண்ட்லா என்ற சிறிய ஊரைச் சேர்ந்த மக்கள், ஆண்டுதோறும் பாரம்பரியமாக விழா கொண்டாடி வருகின்றனர். அதன்படி, இந்த ஆண்டும் வழக்கமான விழா எரிமலைக்கு விழா நடைபெற்றது. பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை படையலிட்டும், மெழுகுவர்த்தி ஏற்றியும், தூபம் காட்டியும் எரிமலையை வழிபட்டனர். பின்னர், பாரம்பரிய நாட்டுப்புற பாடல்களை பாடியும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். எரிமலை வெடிக்கும் போது, அழிவுகளை ஏற்படுத்தக் கூடாது என்ற நோக்கத்தில் இந்த வழிபாடும், கொண்டாட்டங்களும் நடைபெறுவதாக அந்த நகர மக்கள் தெரிவித்துள்ளனர்.