வெளியேறிய இஸ்ரேல் ராணுவம்... ``ஆனால்''..! - பாலஸ்தீனம் சொன்ன அதிர்ச்சி செய்தி
காசாவின் வடக்குப்பதியில் உள்ள மருத்துவமனையில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேறியுள்ளதாக பாலஸ்தீனிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவம் இந்த மருத்துவமனை மீது கடந்த வெள்ளிக்கிழமை திடீர் தாக்குதல் நடத்தியது. பின்னர், அந்த மருத்துவமனையிலிருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேறியது. எனினும், மருத்துவமனை இயக்குநர் உள்பட 40-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்களையும், சில நோயாளிகளையும் இஸ்ரேல் ராணுவம் தடுத்து வைத்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பின்னர், இதில், 14 பேர் விடுவிக்கப்பட்டனர். இதனிடையே, காசாவின் வடக்குப்பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.