நமக்கு எப்படி பாகிஸ்தான் பகையான பங்காளி நாடா இருக்கோ அது மாதிரி... இங்கிலாந்து நாட்டுக்கு ஒரு பாகிஸ்தான்னா அது அயர்லாந்து தான்... அதுக்கு காரணம் இந்த நாட்டு மக்களோட மொழி பற்று...
என்ன தான்... உலகம் ஃபுல்லா இங்கிலீஸ் பொது மொழியா இருந்தாலும் இந்த நாட்டு மக்கள் தங்களோட மொழிக்கும்... மொழி பேசுரவங்களுக்கும் தான் முதல் அங்கீகாரம் குடுப்பாங்க...
இது மட்டும்மில்லாம அயர்லாந்துல இயற்கை வளமும், தொழில் வளமும் நாடு முழுக்க நிரம்பி கிடக்குறதுனால பெரும்பாலான அயர்ந்து மக்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடி போகாம தன்னோட சொந்த நாட்டுலயே வேலை வாய்ப்ப உருவாக்கிக்கிறாங்க....
முக்கியமா இயற்கையான சுற்றுலா தளங்கள் இங்க ஏகப்பட்டது இருக்குறதுனால ஊர் சுத்திபாக்குறதுக்கு உகந்த இடமா இந்த ஊர் இருக்கு... அதுனால நாமலும் பொட்டிய கட்டிட்டு அயர்லாந்துக்கு பறக்க ஆரம்பிக்கலாம் வாங்க...
ஹேய் இந்த இடமா இது நிறைய தமிழ் சினிமா பாட்டுல வருமே அந்த இடம் தானேனு டவுட்டா கேக்காதீங்க... நீங்க நினைச்சது மிஸ் ஆகுமா அதே இடம் தான்... அயர்லாந்து நாட்டோட முக்கியமான எல்லை பகுதிதான் Cliffs of Moher ... உயரமான நிலபரப்புக்கு பக்கத்துல... அழகான கடல் இருக்குறதுனால... முதல்ல இந்த இடத்துக்கு சினிமா காரங்க தான் அதிகம் வர ஆரம்பிச்சாங்க.... அதோட எபஃக்ட்டுனால தான் அடுத்தடுத்து மக்கள் கூட்டமும் படையெடுக்க ஆரம்பிச்சு... இப்போ அயர்லாந்து நாட்டோட முக்கியமான டூரிஸ்ட் ஸ்பாட்டா மாறிடுச்சு Cliffs of Moher...
கழுகு பார்வைல பறந்து பாக்கும்போது... பிரம்மிப்பு கலந்த ஆச்சர்யத்தை குடுக்குது இந்த ஸ்பாட்... எப்பா தம்பிகளா... கொஞ்சம் தள்ளி நின்னு வேடிக்கை பாருங்கய்யா... உசுரோட ஊரு போய் சேரனும்...