சிதைந்த பூமியில் சைக்கிளில் சிகிச்சை...காசாவை காக்க வந்த மனித கடவுள்

Update: 2023-11-04 04:38 GMT

காசா மீது இஸ்ரேல் படைகள் நடத்திய தொடர் தாக்குதல்களால் லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் சொந்த நிலத்திற்குள்ளேயே பாதுகாப்பான இடங்கள் தேடி தஞ்சம் அடைந்து வருகின்றனர்... இடைவிடாத இஸ்ரேல் படைகள் தாக்குதலால் கட்டடங்கள் சுக்கு நூறாகி வரும் நிலையில், ஐநா பள்ளிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது... இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கும் இடங்களுக்கு நேரில் சென்று 54 வயதான ஹசன் ஜைன் அல் டின் என்ற இந்த மருத்துவர் சிகிச்சை அளித்து வருகிறார்... சேதம் அடைந்த சாலைகள், இடிபாடுகளால் பாதிக்கப்பட்ட மக்களை அடைவதில் சிக்கல் எழுந்துள்ளது... காசா முழுமைக்கும் எரிபொருள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், எரிபொருள் இல்லாததால் இவர், தனது காரை விட்டுவிட்டு சைக்கிளில் பயணித்து மக்களுக்கு சிகிச்சை அளிப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்