'இம்பீரியல் அதி ஆடம்பர பெயின்ட்' அறிமுகம் செய்த சர்ஃபா கோட்ஸ் | Thanthitv

Update: 2024-09-21 02:45 GMT

சர்ஃபா கோட்ஸ் பெயின்ட் நிறுவனம், புதியதாக, 'இம்பீரியல் அதி ஆடம்பர பெயின்ட்டை' அறிமுகம் செய்துள்ளது. இந்த இம்பீரியல் பெயின்ட், சுவரில் நீண்ட ஆயுளுடன் நீடிக்கும் என்றும், பூஞ்சைகள், பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை கொண்ட‌து என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்பீரியல் அதி ஆடம்பர பெயின்டில், மெர்குரி, லெட், குரோமியம் மற்றும் ஆர்செனிக் சேர்க்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. குறைந்த வாசனை, குறைந்த V.O.C.யுடன் பசுமை சான்று பெற்றுள்ளதாகவும் சர்ஃபா கோட்ஸ் பெயின்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்