ஹவாய் தீவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டு தீ மிகப்பெரிய இயற்கை பேரழிவு என அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஹோ பைடன் நிவாரண பணிகளுக்கு தேவையான நிதியுதவி அளிக்கவும் ஒப்புதல் அளித்துள்ளார். அமெரிக்காவின் ஹவாய் தீவுக் கூட்டங்களில் ஒன்றான மவுயி தீவில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. வேகமாக பரவி வரும் காட்டு தீயில் ஏராளமான வீடுகள் எரிந்து சாம்பலாயின. இதில் சிக்கி இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ,நூற்றுக்கணக்கானோர் தீயிலிருந்து தங்களை காப்பாற்றி கொள்ள கடலில் குதித்தனர். அவர்களில் மாயமனான பலரை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்படுள்ளன. காட்டு தீயை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.