இஸ்ரேல் படைகள் அதிரடி தாக்குதல் நடத்தி 60 ஹமாஸ் குழுவினரைக் கொன்று 250 பணயக் கைதிகளை மீட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை வீடியோ வெளியிட்டுள்ளது. சுஃபாவில் இஸ்ரேலின் ஃப்ளோட்டில்லா 13 யூனிட் நடத்திய இந்த அதிரடி நடவடிக்கையில் 26 ஹமாஸ் குழுவினர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஹமாஸ் தெற்கு கடற்படைப் பிரிவின் துணைத் தளபதி முஹம்மது அபு அலியும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.