ஊழல் வழக்கில் கைதான இம்ரான்கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சிறையில் 'சி' வகுப்பு அறையில் அவர் அவதிப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆட்சியில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவருடைய ஆட்சி கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து இம்ரான்கான் மீது 100-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், சிறையில் இம்ரான்கானுக்கு 'சி' வகுப்பு என்னும் சாதாரண அறையே ஒதுக்கப்பட்டது. திறந்த கழிப்பிட வசதி கொண்ட அறையில் காற்று, வெளிச்சம் புகாத வண்ணம் இருப்பதால், அவர் அவதிப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.