தூக்கிலிடப்பட்ட முன்னாள் பிரதமர்...6 முன்னாள் பிரதமர்களுக்கு ஜெயில்

Update: 2023-08-08 15:14 GMT

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில்

அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு முன்பு அங்கு சிறை தண்டனை அனுபவித்த பிரதமர்கள் குறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...

பிரதமராக பதவி வகித்த போது பெற்ற விலை மதிப்பு மிகுந்த

பரிசு பொருட்களை சட்ட விரோதமாக விற்பனை செய்த

வழக்கில், இம்ரான் கானிற்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் 75 ஆண்டு கால வரலாற்றில், சிறை தண்டனை பெறும் ஆறாவது முன்னாள் பிரதமர் இம்ரான் கான் என்பது குறிப்பிடத்தக்கது.

1962ல், பாகிஸ்தானின் ஐந்தாவது பிரதமராக இருந்த ஹுசைன் சஹீத் சுகரவர்த்தி, தேச விரோத சட்டத்தில்

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.

1974 ல் ஒரு அரசியல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட

முன்னாள் பிரதமர் ஸுல்பிகர் அலி பூட்டோ, 1979ல் தூக்கில் இடப்பட்டார்.

அவரின் மகளான பெனாசிர் பூட்டோ, 1988 மற்றும் 1993ல்,

இரண்டு முறை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தார்.

பல்வேறு வழக்குகளில் பல முறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பெனாசிர் பூட்டோவிற்கு, 1999ல் ஊழல் வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

2018ல் முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீப் ஒரு ஊழல்

வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சிறையிலடைக்கப்பட்ட ஷெரீப் 2019ல் சிகிச்சைகாக லண்டன் சென்றவர், அதன் பின் இன்று வரை பாகிஸ்தான் திரும்பவில்லை.

2019ல் இயற்கை எரிவாயு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ஷாகித் கான் அப்பாசி, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ஆனால் பாகிஸ்தானின் அரசியல் சட்டத்திற்கு முரணாக, ராணுவ ஆட்சியை பிரகடனம் செய்து, ராணுவ சர்வாதிகாரி யாக செயல்பட்ட முஷாராப் உள்ளிட்ட நான்கு ராணுவ தளபதிகள் யாருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தில்லை என்பது ஒப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்