எலான் மஸ்க் போட்ட பதிவு `X' தளத்துக்கு தடை - அதிரடி உத்தரவு

Update: 2024-08-31 15:38 GMT

பிரேசிலில் 'எக்ஸ் தளத்திற்கு தடை விதித்து, அந்நாட்டின் உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி அலெக்சாண்டிரே டிமொரேஸ், பிரேசில் நாட்டில் 'எக்ஸ்' தளத்திற்கான சட்ட விவகார பிரதிநிதியை அடுத்த 24 மணி நேரத்தில் நியமிக்க வேண்டும் என்றும், தவறினால் பிரேசிலில் 'எக்ஸ்' தளம் முடக்கப்படும் என்றும் உத்தரவிட்டார். ஆனால் இந்த உத்தரவை ஏற்க முடியாது என்று எலான் மஸ்க் திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த நிலையில், பிரேசில் நாட்டில் 'எக்ஸ்' தளத்திற்கு தற்காலிக தடை விதித்து, பிரேசில் சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதன்படி 24 மணி நேரத்திற்குள் 'எக்ஸ்' தளத்தை பிரேசில் நாட்டிலிருந்து முடக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்