கனடாவின் பழமை வாய்ந்த டல்ஹவுசி பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இருந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களிடம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கலந்துரையாடினார். கனடாவில் பயின்று வரும் கல்வியின் உபயோகத்தை தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு உதவக்கூடிய வகையில், பயன்படுத்துவது குறித்தும், விவசாயத்திற்கான செலவுகளை கட்டுப்படுத்தி வருமானத்தை அதிகரிக்கும் வகையில் என்னென்ன உத்திகளை கையாள வேண்டும் என்பது போன்ற விஷயங்களையும் மாணவர்களிடம் அமைச்சர் வலியுறுத்தினார்.