சர்வதேச சமையல் - கோல்டு காயின் எக்ஸ்...

Update: 2024-08-25 13:02 GMT

தங்க முட்டை இடுற வாத்துனு கற்பனை கதையை கேள்வி பட்டுருப்பீங்க... ஆனா சமைச்சு சாப்புடுற ரெசிபில தங்க முட்டைய கேள்விப் பட்டிருக்கீங்களா... அப்படி ஒரு அசத்தலான சமையலத்தான் பார்க்கப் போறோம் சர்வதேச சமையல்ல...

இன்னைக்கு சர்வதேச சமையலில் நாம் பார்க்கப் போற ரெசிபி... சீனர்களின் கண்டுபிடிபான gold coin eggs.

பொதுவா முட்டையை வாங்குனா என்ன பன்னுவோம்... ஆம்லெட் போடுறது ஆப்பாயில் போடுறது , பொறியல் பன்றதுன்னு இன்னும் வழக்கத்தை மாத்தாம சமைச்சுட்டு சாப்டுட்டு இருக்கோம்...

ஆனா வீகெண்டுல ஏதவது தினுசா செஞ்சு சாப்பிட்டாதான்,

நம்ம வயிறே நம்மல வாயாற வாழத்தும்.

சரி வாங்க... gold coin eggs எப்படி செய்யுறதுன்னு பாக்கலாம்...

Gold coin egg ரெசிபிக்கு தேவையான பொருட்கள்... முட்டை , கான் ஃபிளார் , சோயா ஆயில் , அரைத்த மிளகாய் விதை , அரைத்த பூண்டு , வெங்காயதாள் அவ்வளவு தான்....

முதல்ல ஒரு பாத்திரத்துல தண்ணியை ஊத்தி, 3 முட்டையை பாத்திரத்தில் போட்டு ஒரு ஸ்பூன் உப்பையும் கலந்து 12 நிமிஷம் பதமாக வேக வச்சிக்கணும்...

வேக வச்ச முட்டையை ஓடு நீக்கிட்டு, ஒரு கத்தியால அதை வட்ட வட்டமா காய்ன் வடிவத்துல நறுக்கி.... அதோட 2 பக்கமும் கான்ஃபிளார் மாவை தூவிக்கணும்...

அடுத்து வேற ஒரு பாத்திரத்துல ரெண்டு ஸ்பூன் அளவு எண்ணெயை ஊத்தி நறுக்கி வச்ச முட்டை துண்டுகளை ஒவ்வொண்ணா எண்ணெயில இறக்கி மிதமான பொன் நிறத்துல வறுத்துக்கணும். வெள்ளை நிற முட்டை பொன் நிறத்துக்கு வந்ததும் அறைச்சு வச்ச மிளகாய் விதையை அரை ஸ்பூன் அளவு மேல தூவிடனும்.. கூடவே கொஞ்சம் நறுக்குன இஞ்சி, அப்பறம் 4 பூண்டு பொடிப்பொடியா நறுக்கி தூவிக்கனும்.

அடுத்து சமையலுக்கு கூடுதல் சுவையை கொடுக்க சோயா ஆயில் 1 ஸ்பூன் அளவு ஊத்தி மிக்ஸ் பண்ணினா கிட்டதட்ட சமையல் ஓவர்.

ம்ம்ம்... ஏதோ ஒன்னு மிஸ் ஆகுதே... ஆ... ன்.. ஃபைனல் டச்சா வெங்காய தாளை குட்டி குட்டியா வெட்டி இந்த Gold coin eggன் மேலே தூவி விட்டா சமையல் ரெடி... வெங்காய தால் தான் போடணுமான்னு சிலரோட மைன்ட் வாய்ஸ் கேக்கலாம்... அது கிடைக்கலைன்னா கொத்தமல்லியை நறுக்கி கூட தூவிக்கலாம்... வீட்டுல என்னிக்காச்சும் தயிரோ , சாம்பாரோ , ரசமோ வச்சிருந்தா இந்த Gold coin egg-கை துனைக்கு வச்சு சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்க வேண்டியது தான்...

Tags:    

மேலும் செய்திகள்