52 முறை குலுங்கிய சீனா - 21 பேருக்கு நேர்ந்த கதி
கிழக்கு சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 21 பேர் காயம் அடைந்ததுடன், ஏராளமான கட்டடங்கள் சிதைந்தன. ஷான்டாங் மாகாணத்தில் உள்ள டெசோ நகருக்கு தெற்கே 26 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வானது தலைநகர் பெய்ஜிங் மற்றும் தியான்ஜின் வரையில் மட்டுமல்லாது 800 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஷாங்காய் வரையிலும் உணரப்பட்டது. கட்டடங்கள் குலுங்கின. 121 கட்டடங்கள் இடிந்து விழுந்தன. 21 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 52 முறை நில அதிர்வு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.