வடகொரியா புதிய திட எரிபொருள் என்ஜினை தயாரித்து சோதனை செய்துள்ளது. பாலிஸ்டிக் ஏவுகனைகளை ஏவுவதற்காக இந்த புதிய வகை என்ஜினை தயாரித்துள்ளது. இது, திட எரிபொருளைக் கொண்டு அதிக உந்துவிசையுடன் இயங்கக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 11 முதல் 14 வரை பல கட்டமாக இந்த என்ஜின் சோதனை செய்யப்பட்டுள்ளதாக வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமாக கேசிஎன்ஏ தெரிவித்உதள்ளது.