அமெரிக்க தேர்தல் தெற்காசியாவையே திரும்பவைத்த A R ரகுமான் முடிவு நாளை காலை 5:30 மணிக்கு...

Update: 2024-10-12 14:53 GMT
  • அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிசுக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 30 நிமிட இசைக்கச்சேரியைப் பதிவு செய்துள்ளார்... இது குறித்த செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...
  • அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் ஒலிக்கப் போகிறது ரகுமானின் குரல்...
  • அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலம் கூட மீதமில்லை...
  • குடியரசுக் கட்சி சார்பில் மீண்டும் களமிறங்கும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிசும் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு பம்பரமாய் சுழன்று தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்...
  • இசையமைப்பாளர் கிட் ராக், ரெஸ்ட்லிங் ஸ்டார் ஹல்க் ஹோகன், ராப்பர் ஆம்பர் ரோஸ் போன்ற பலர் பிரபலங்கள் ட்ரம்ப்புக்கும்...
  • பாடகிகள் டெய்லர் ஸ்விஃப்ட், Beyonce, Katy Perry, Billie Eilish- அவரது சகோதரர் Finneas போன்ற பலர் கமலா ஹாரிசுக்கும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது...
  • இந்த சூழலில், அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளாராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டதைக் கொண்டாடும் விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசைக் கச்சேரி ஒளிபரப்பாகிறது...
  • இந்திய மற்றும் ஆப்பிரிக்க பாரம்பரியத்தில் இருந்து வந்த கமலா ஹாரிசை ஆதரிக்கும் தெற்காசியாவின் முதல் முக்கிய சர்வதேச கலைஞர் ரகுமான் ஆவார்...
  • அமெரிக்க, பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி அமைப்பான ஏஏபிஐ இதுகுறித்தான அறிவிப்பையும், டீசர் வீடியோவையும் வெளியிட்டுள்ளது...
  • கமலா ஹாரிசின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவாக பிரத்யேகமாக 30 நிமிட இசைக்கச்சேரியை ரஹ்மான் பதிவு செய்துள்ளார்...
  • இந்த 30 நிமிட நிகழ்ச்சியில் ரஹ்மானின் புகழ்பெற்ற சில பாடல்கள்...அத்துடன்
  • அதிபர் தேர்தலில் களம்காணும் முதலாவது கறுப்பின மற்றும் ஆசிய அமெரிக்க பெண் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ள கமலா ஹாரிஸ் குறித்தும் இடம்பெறும்...
  • இது இந்திய நேரப்படி நாளை காலை 5.30 மணிக்கு நேரடியாக யூ டியூபில் ஒளிபரப்பாகவுள்ளது...
  • இந்திய வம்சாவளி கமலா ஹாரிசுக்கு ஆதரவாக ரஹ்மான் களமிறங்கியது அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஓட்டுகளைக் கவரும் என்பதில் சந்தேகமில்லை...
Tags:    

மேலும் செய்திகள்