USஐ கலங்கடித்த `அம்மா' வார்த்தைகள்... சற்றும் எதிர்பாரா டொனால்ட்... தலைகீழான நிலை

Update: 2024-08-24 15:09 GMT

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு டப் கொடுப்பாரா? என்பதை தாண்டி அவரை தோற்கடிப்பார் என சொல்லும் வகையில் கமலா ஹாரிஸ் ரேசில் முந்துவது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு..

ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் கோரிக்கையை ஏற்பதாக கமலா சொன்னதும் எழும் கரகோஷம் இது.. டிரம்பை வந்து பார் என சவால் விடுக்கும் கமலாவால்... பைடன் சொதப்பலால் துவண்ட கட்சியினர் படு உற்சாகம் கொள்கிறார்கள்.

கருத்துக் கணிப்புகளில் டிரம்பை 4 % பின்னுக்கு தள்ளி 49 % ஆதரவை வசமாக்கியிருக்கிறார் கமலா...

சிகாகோ கட்சி மாநாட்டில்... வெல்வேன் என்ற அவரது பேச்சிலேயே உத்வேகம் தெரித்தது. பொருளாதாரம், ராணுவம், கருப்பினத்தவர் என்பதை தாண்டி பெண்கள் என அனைவரையும் தன் பக்கம் இழுக்கும் சாதூர்யத்தை காட்டினார்.

எல்லா நாடுகளை போல்... அமெரிக்காவிலும் விலைவாசி உயர்வு தேர்தலில் பேசப்போகிறது. டிரம்ப் வந்தால் பெரும் முதலாளி நண்பர்களுக்கு வரியை ரத்து செயார் என குற்றம் சாட்டினார் கமலா...

காசா விவகாரத்தில் போராட்டம் நடக்கும் வேளையில்... போர் நிறுத்தம் என்பதே எங்கள் பாதை என தெளிவாக்கினார் கமலா...


அமெரிக்காவில் பெண்கள் கருகலைப்புக்கு தடை பல மாகாணங்களில் பிரச்சினையாக இருக்க, டிரம்ப் கட்சிக்கு ஷாக் கொடுக்க...பெண்களுக்கான கருக்கலைப்பு உரிமையை நிலைநாட்டுவேன் என்றார்.

2021 நாடாளுமன்ற தாக்குதலை குறிப்பிட்ட கமலா... டிரம்பை மீண்டும் வெள்ளை மாளிகைக்குள் அனுமதித்தால் விளைவுகள் மிக தீவிரமாக இருக்கும் எனவும் எச்சரித்தார்... எதிர்காலம்... கடந்த கால ஒப்பீடு தெளிவான பேச்சு என டிரம்ப்... பைடனிலிருந்து தனித்துமாக இருக்கிறார் கமலா. அமெரிக்க வாழ் தமிழரிடம் பேசிய போதும்.. கமலா வரலாறு படைக்கவும் வாய்ப்பு என்றார்.

இந்த போக்கை உடைக்க முயற்சிப்பார் டிரம்ப். பிரசாரங்களில் கலக்கும் கமலா, செப்டம்பர் 10-ல் நேரடி விவாதத்தில் டிரம்பை எப்படி கார்னர் செய்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்