"ராட்சத புயல் Loading..." - "பனிப்பொழிவு 12 அடி வரை உயரும்" - பறந்த எச்சரிக்கை -அச்சத்தில் அமெரிக்கா
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சியரா நெவாடாவின் சில பகுதிகளில் 106.68 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு பதிவாகியுள்ளது... கலிபோர்னியாவில் கடும் பனிப்புயல் வீசி வரும் நிலையில், வார இறுதியில் பனிப்பொழிவு 12 அடி வரை உயரக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது... மணிக்கு 190 மைல் வேகத்தில் பனிப் புயல் வீசி வரும் நிலையில் மக்கள் பனிச்சறுக்கு உள்ளிட்டவற்றில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது... ஆபத்தான சூழல் காரணமாக முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன... இந்த புயல் ஓரிகான் மற்றும் வாஷிங்டனில் உள்ள கேஸ்கேட் ரேஞ்ச் மலைகளிலும், இடாஹோ, மொன்டானா மற்றும் வயோமிங்கில் உள்ள வடக்கு ராக்கி மலைகளிலும் கடுமையான பனிப்பொழிவை உருவாக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது...