மண்டையோடுகளை அலங்கரித்து வழிபாடு - திகிலூட்டும் திருநாள்

Update: 2023-11-09 07:07 GMT

பொலிவியா நாட்டில், இறந்தோர் நாளையொட்டி, இறந்த உறவினர்களின் மண்டையொடுகளை அலங்கரித்து உறவினர்கள் வழிபட்டனர். அந்நாட்டின் லா பாஸ் நகரத்தில், இறந்தோர் நாள் எனப்படும் கல்லறை திருநாள் அண்மையில் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, இறந்தவர்களின் மண்டையோடுகளை பூக்கள், சன்கிளாஸ்கள், தொப்பிகள் மற்றும் புகைபிடிக்கும் சுருட்டுகள் அல்லது பொலிவியன் சின்னமான கோகோ இலைகளால் அலங்கரித்தும், இறந்த முன்னோர்களுக்கு படையலிட்டும் வழிபாடு நடத்தினர். அய்மாரா, கெச்சுவா மற்றும் பிற குழுக்களின் மரபுகள் மற்றும் கலாச்சாரங்கள் பொலிவியாவில் வலுவாக உள்ளன. கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் பழங்குடியின மக்கள் இந்த வித்தியாசமான பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்