வானில் நிகழும் அரிய நிகழ்வு...விடிய விடிய கண்டு ரசித்த மக்கள் - கண்களை கவரும் காட்சிகள்
ஐரோப்பிய கண்டத்தில் உள்ள பால்கன் பிராந்தியத்தில் பெர்செய்ட் (Perseid) விண்கல் மழையை மக்கள் இரவு முழுவதும் கண்டு ரசித்தனர்... ஆண்டுதோறும் வானில் நிகழும் அதிசயங்களுள் ஒன்று தான் இந்த விண்கல் மழை... பூமியின் ஈர்ப்பு விசையால் சிறிய விண்கற்கள் ஈர்க்கப்படும் போது இந்த அதிசயம் நிகழ்கிறது. பூமியின் வளிமண்டலத்தில் அதிவேகத்தில் பயணிக்கும் போது அவை எரிந்து சாம்பலாகும். இந்த வருடத்திற்கான விண்கல் மழையை பால்கன் பிராந்தியத்தில் மக்கள் இரவு முழுவதும் காத்திருந்து கண்டு ரசித்தனர்...