"எங்கள் பக்கம் வந்துவிடுங்கள்" - இந்தியாவிற்கு உக்ரைன் அழைப்பு
ரஷ்யாவுடனான நட்பை முறிக்கும் காலம் இந்தியாவிற்கு வந்துவிட்டது என்றும் அமெரிக்கா இந்தியாவிற்கு எல்லா விதத்திலும் துணை நிற்கும் என்றும்...
"எங்கள் பக்கம் வந்துவிடுங்கள்" - இந்தியாவிற்கு உக்ரைன் அழைப்பு
ரஷ்யாவுடனான நட்பை முறிக்கும் காலம் இந்தியாவிற்கு வந்துவிட்டது என்றும் அமெரிக்கா இந்தியாவிற்கு எல்லா விதத்திலும் துணை நிற்கும் என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
இந்தியாவுடன் சேர்த்து ஆசிய நாடுகளுக்கும் அவர் விடுத்துள்ள கோரிக்கையை தற்போது பார்க்கலாம்.
உக்ரைனில் மனித உரிமை மீறல் செயலில் ஈடுபடுவதாகவும், உக்ரைன் மீதான போரை நிறுத்த வலியுறுத்தியும் கடந்த காலங்களில் ரஷ்யா மீது ஐநா சபையில் பல தீர்மானங்கள் கொண்டு
வரப்பட்டன.
வரப்பட்டன.
தொடக்கத்தில் ரஷ்யாவிற்கு எதிரான தீர்மானங்களை பல நாடுகளும் ஆதரித்து வந்த நிலையில்,
கடந்த முறை கொண்டு வரப்பட்ட மூன்றாவது தீர்மானத்தின் போது, ரஷ்யாவிற்கு எதிராக வாக்களித்த நாடுகளின் எண்ணிக்கை குறைந்திருந்தது.
உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து, மூன்றாவது தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ள நாடுகளின் எண்ணிக்கை குறைந்ததும்,
வாக்கெடுப்பை புறக்கணித்த நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்ததும் கவனம் பெற்றன.
உக்ரைன் - ரஷ்யா விவகாரத்தில் தொடர்ந்து நடுநிலை வகிப்பது என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. இதனாலேயே ரஷ்யாவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட மூன்று தீர்மானத்தின் போதும், இந்தியா வாக்களிக்காமல் ஒதுங்கி நின்றது.
இந்தியா மட்டுமின்றி இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா, நேபாளம், பூடான், வங்க தேசம், ஸ்ரீலங்கா, மாலதீவு போன்ற நாடுகளும்,
தென் கிழக்கு ஆசிய நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், கம்போடியா, தாய்லாந்து, இந்தோனேஷியா போன்ற நாடுகளும்,
மத்திய கிழக்கு ஆசிய நாடுகளான ஓமன், ஏமன், சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், ஈராக், குவைத் போன்ற நாடுகள் ரஷ்யாவிற்கு எதிரான வாக்கெடுப்பில் பங்கேற்காததை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்கண்ட ஆசிய நாடுகள் உக்ரைன் மீதான தங்களின் அணுகுமுறையை மாற்றி கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டுள்ள ஜெலன்ஸ்கி,
அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் இந்தியாவிடம் தொடர்ந்து ரஷ்யாவிற்கு எதிராக கண்டனம் தெரிவிக்குமாறு இனிமையாக பேசி வலியுறுத்தி வருவதாக குறிப்பிட்டார்.
சோவியத் யூனியன் காலத்தில் இருந்து ரஷ்யாவுடன் இந்தியா நெருக்கம் காட்டி வருவதை சுட்டி காட்டிய ஜெலன்ஸ்கி,
தற்போது அந்த காலம் மாறிவிட்டதாகவும், இந்தியாவுடன் வர்த்தகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் பாதுகாப்பு என அனைத்திலும் துணை நிற்க
அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் கூறி, தங்கள் பக்கம் நிற்குமாறு இந்தியாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதே வேளையில், போர் தொடங்கிய நாள் முதல் அவ்வபோது அமெரிக்கா தங்களை கைவிட்டுவிட்டதாக ஜெலன்ஸ்கி அடிக்கடி கூறி வருவது குறிப்பிடத்தக்கது.