நைஜீரியாவில் கால் தடத்தை பதித்த மறுநொடி.. மோடிக்கு நடந்த சுவாரஸ்ய நிகழ்வு

Update: 2024-11-17 07:03 GMT

அரசு முறை பயணமாக நைஜிரியா சென்ற பிரதமர் மோடிக்கு அபுஜா விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு பாரம்பரிய நடனமாடி பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், திறவுகோல் ஒன்று அவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நைஜிரிய வாழ் இந்தியர்கள் மோடி மோடி என முழக்கமிட, மராத்திய மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கிய பிரதமருக்கு அந்த சமூக மக்கள் நன்றி தெரிவித்தனர். இந்நிலையில், அபுஜாவில் அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்த காட்சிகளை பிரதமர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்