"இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டேன்" பிரிட்டன் பிரதமர்
"இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டேன்" பிரிட்டன் பிரதமர்
பிரிட்டன் நிறுவனங்கள் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்வதை வரவேற்கிறோம் என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இந்தியா பிரிட்டன் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி,
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை ஒரு வரலாற்று நிகழ்வு என்றார்.இதன் மூலம் இந்தியா பிரிட்டன் இடையிலான உறவுகள் வலுப்பெறும் என்றும்,பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு கிடைக்கும் ஒத்துழைப்பை வரவேற்பதாகவும் குறிபிட்டார்.
வர்த்தக ரீதியான ஒப்பந்தங்களில் இரு தரப்புக்கும் இடையே நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும்,பிரிட்டன் நிறுவனங்கள் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்வதை வரவேற்பதாகவும அவர் கூறினார்.
கிளாஸ்கோவில் நடந்த சுற்றுச்சூழல் மாநாட்டின் இலக்குகளை அடைய இந்தியா முயற்சி செய்து வருகிறது என்றும், இந்தியாவின் ஹைட்ரஜன் மிஷனில் இணைய பிரிட்டனுக்கு அழைப்பு விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பாதுகாப்புத் துறை, வர்த்தகம், காலநிலை மற்றும் எரிசக்தி தொடர்பாக பேச்சு நடத்தியதாகவும்,
உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
உக்ரைனில் உடனடிப் போர்நிறுத்தம் மற்றும் பிரச்சனைக்குத் தீர்வு காண பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்தை வலியுறுத்தியதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.