லூலூ மார்ட் எப்படி இருக்கும்?

அபுதாபியை தலைமையகமாக கொண்ட லூலு குழுமம், 2000ம் ஆண்டில் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் யூசப் அலியினால் தொடங்கப்பட்டு, தற்போது ஆண்டுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது...

Update: 2022-04-07 10:08 GMT
அபுதாபியை தலைமையகமாக கொண்ட லூலு குழுமம், 2000ம் ஆண்டில் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் யூசப் அலியினால் தொடங்கப்பட்டு, தற்போது ஆண்டுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது.

உலகெங்கும் 22 நாடுகளில், 231 ஹைப்பர்மார்ட்கள் (hypermart) எனப்படும் பிரம்மாண்டமான பேரங்காடிகளையும், உணவு பதப்படுத்தும் மையங்களையும் நடத்திவரும் இந் நிறுவனத்தில், உலகெங்கும் 57,000 பேர் பணி புரிகின்றனர்.

5,000 வகையான பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை தயாரித்து, தனது ஹைப்பர்மார்ட்கள் மூலம் விற்பனை செய்கிறது.

தமிழகத்தில் 3,500 கோடி ரூபாய் முதலீட்டில், ஷாப்பிங் மால்கள், ஹைப்பர்மார்ட்கள் (hypermart) மற்றும் உணவு பதப்படுத்தும் மையங்களை உருவாக்க தமிழக அரசுடன்  ஒப்பந்தம் செய்துள்ளது.

சென்னையில் 2024இல் ஒரு ஷாப்பிங் மால் கட்டப்பட உள்ளது. கோவையில் லக்‌ஷ்மி மில் வளாகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு ஹைப்பர்மார்ட்
திறக்கப்பட உள்ளது.

உணவு பதப்படுத்தும் மையங்கள் மூலம் தமிழகத்தில் இருந்து பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.

அடுத்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் 15 ஆயிரம் பேருக்கு நேராடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த உள்ளதாக லூலு குழுமத்தின்
நிறுவனர் யூசப் அலி கூறியுள்ளார்.

கொச்சின், திருச்சூர், திருவனந்தபுரம் மற்றும் பெங்களூரூ ஆகிய நான்கு தென் இந்திய நகரங்களில், லூலு குழுமத்தின் ஹைப்பர்மார்ட்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், லூலு நிறுவனம் தமிழகத்தில் மால்களை தொடங்கினால், சிறு வியாபரிகள் பாதிப்படைவார்கள் என்று வியாபாரிகள் நலச்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஆனால் பெங்களூரூ, கொச்சின் போன்ற நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள லூலூ ஹைப்பர்மார்ட்களினால் சிறு வியாபரிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று துறை சார் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்