"எங்கள் மண்ணை பயன்படுத்த விடமாட்டோம்" - சீனாவிடம் தலிபான் குழு உறுதி

சீனாவுக்கு முதல்முறையாக சென்றுள்ள தலிபான் குழு, அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து பேசியுள்ளது.

Update: 2021-07-29 07:31 GMT
சீனாவுக்கு முதல்முறையாக சென்றுள்ள தலிபான் குழு, அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து பேசியுள்ளது. அப்போது, சீனாவுக்கு எதிராக தங்கள் மண்ணை யாரும் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என வாக்குறுதி அளித்ததாக தலிபான் தெரிவித்துள்ளது. ஆப்கானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து, புது உத்வேகம் பெற்றுள்ள தலிபான்கள் அரச படைகளுடன் போரிட்டு தங்கள் எல்லைகளை விரிவாக்கம் செய்கிறார்கள். மறுபுறம் அமெரிக்காவுக்கு சவாலளிக்கும் வகையில் பிராந்தியத்தில் அரசியல் பலத்தை விஸ்தரிப்பதிலும் தலிபான் கவனம் செலுத்துகிறது. பாகிஸ்தானுடன் ஏற்கனவே நட்பு பாராட்டும் தலிபான்கள், ஈரான், துருக்கி, சீனாவுடன் நட்பு பாலத்தை ஏற்படுத்த முனைகிறது. அந்தவகையில் தலிபான்கள் குழு சீனாவுக்கு சென்று, அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யியை சந்தித்து பேசியுள்ளது.அமெரிக்க படைகள் வெளியேறியதும் சீனாதான் எங்கள் நண்பன் என தலிபான்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்